தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழையிலை மற்றும் வாழைத்தார் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வாழையிலை ஒரு கட்டு ரூ.1450க்கு விற்பனையாக இருந்த நிலையில், இன்று ரூ.2000 ஆக உயர்ந்துள்ளது. திருமணங்கள், சுப நிகழ்வுகள், பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாழையிலையின் தேவை அதிகரித்துள்ளதால் விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வாழைத்தாரின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.450க்கு விற்பனையான வாழைத்தார், இன்று ரூ.800 வரை உயர்ந்துள்ளது. முகூர்த்த நிகழ்வுகள் காரணமாக வாழைத்தாருக்கும் அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த நாட்களில் சப்ளை குறைவதும், தேவை அதிகரிப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் கூட விலை மாறக்கூடும் என்றும் கூறுகின்றனர்.