
மதுரை மாநாட்டில் த.வெ.க தொண்டரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக ஜோசஃப் விஜய் மீது வழக்குப் பதிவு.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த த.வெ.க. வின் இரண்டாவது மாநில் மாநாடு மதுரையில் ப்ரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் “ரேம்ப் வாக்” சென்ற விஜயை சந்திக்கும் ஆவலில் பெரியம்மபாளையத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் ரேம்ப் மீது ஏறினார். அப்போது, பவுன்சர்கள் அவரை தூக்கி வீசினர்.
இதனால் பவுன்சர்கள் தன்னை தாக்கியதாக சரத்குமார் பெரம்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் த.வெ.க. தலைவர் விஜய் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.