
திண்டுக்கல் பேருந்து நிலையம் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பொது போக்கு எவரத்து மூலம் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய பேருந்து நிலையம் ஆகும்.
இந்த பேருந்து நிலையத்தை தினந்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் . இங்கு சுமார் 200 -கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன . இதில் பல ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் நுழையும் பகுதியை மறைத்து பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர் . இதனால் பல்வேறு விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ நிலையங்கள் தவிர மற்ற இடங்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தக் கூடாது என உத்தரவிட்டு ந இருந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் துறையினரின் மெத்தனபோக்கான நடவடிக்கையின் விளைவாக மீண்டும் மீண்டும் பேருந்து நிலைய நுழைவு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆட்டோ , இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களினால் மறைத்து போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது .

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பேருந்து நிலையத்தை சுற்று உள்ள சாலையோரங்கள் மற்றும் பேருந்து நிலைய பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு விபத்து நிகழும் அச்சுறுத்தல் உள்ள நிலையை கருத்தில் கொண்டு பேருந்து நிலைய உட்பகுதி மற்றும் சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சாலையோர பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாநகராட்சி நிர்வகம் , போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சம்மந்தபட்ட அனைத்து துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.