
திண்டுக்கல் R.M.காலனி சிவாஜிகணேசன் 2-வது தெருவில் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கேரளாவில் அமீபிக் வைரஸ் பரவும் நிலையில் திண்டுக்கல்லில் புதுவகை தொற்றுநோய் உருவாகும் சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் இந்த பிரச்சனை தொடர்ச்சியாக நடைபெறுவதால் இதற்கு ஒரு முடிவே இல்லையா என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இதே நிலைதான் திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட அனைத்து வார்டுகளும் சாக்கடை கால்வாய்கள் முழுமையாக சுத்தம் செய்யப்படாமல் தண்ணீர் தேங்கி சுகாதாரகேட்டை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்