
திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராகவன்(எ) சரவணன்(45) ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜ்குமார்(45) ஆகிய இருவரும் ஜெயராகவன் வீடு மற்றும் வீட்டின் கார் செட் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு மதுபான வகைகள் , இராணுவ மற்றும் துணை இராணுவ படையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முன்னாள் படை அதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கான தனிப்பட்ட பல்பொருள் அங்காடி மூலம் வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து 2பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 789வெளிநாடு மதுபான பாட்டில்கள் , இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர்ரக மதுபான பாட்டில்கள் மற்றும் வெளி மாநில மதுபான பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற குற்றங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை முடித்துக் கொண்டு விடுவர் . ஆனால் இந்த குற்ற வழக்கில் இந்திய இராணுவம், துணை இராணுவம் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்கள் பெருமளவில் பிடிபட்டுள்ளதால் இதில் தொடர்புடைய மொத்த வலையமைப்பையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.