
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி . இந்த மலை முழுவதும் மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ள மலை பகுதி ஆகும் .
இங்கு எந்த ஒரு மராமத்து , பராமரிப்பு மற்றும் புதிய பணிகள் என எந்த ஒரு பணியாக இருந்தாலும் மேற்கண்ட மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தமிழக தலைமை ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என விதிகள் உள்ளன.
இவற்றை கண்காணிக்கவும் , மாவட்ட மலைப்பகுதி பாதுகாப்பு குழு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சம்பந்த பட்ட துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிட் – 19 கால ஊரடங்கை பயன்படுத்தி வருவாய் மற்றும் வனத்துறையினர் ஒத்துழைப்புடன் புதிய ஆக்கிரமிப்பு கட் , விதிமீறல் கட்டுமானங்கள் , மரக்கடத்தல் , சாலை அமைத்தல் என ஆரம்பித்த சட்ட விதிமீறல்கள் தற்போது ரியல் எஸ்டேட் மாபியா , மரக்கடத்தல் மாபியா , அரசு மற்றும் வன நிலங்களை கூறுபோட்டு விற்பனை என தனது கோர முகத்தை கருப்பு பண முதலைகள் வெள்ளை பணமாக மாற்றம் சிறந்த புகழிடமாக சிறுமலை மாறி அழிவை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
த
வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆதரவோடு தினம்தோறும் வெட்டி அழிக்கப்படும் மரங்கள் எதையும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை மலைப்பகுதி இன்று சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் காஃபி , மிளகு, பலா, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறைக்கு சொந்தமாக பல்லாயிரம் ஏக்கர் வன நிலமும் உள்ளது.
இப்பகுதியில் காட்டு மாடு , கடமான் , கேளையாடு, காட்டுப்பன்றி, மலை அணில் , சருகுமான் , முள்ளம் பன்றி , உள்ளிட்ட பல்வேறு அரியவகை வன உயிரினங்களும் அதேபோல் வனப்பகுதி மற்றும் பட்டா நிலங்களில் அதிக அளவில் அரிய வகை மரங்களும் உள்ளன. எ
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு குறிப்பிட்ட பகுதிக்கு அரசு உத்தரவின் பேரில் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி பெற்று சிறுமலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் தினம் தோறும் பல்வேறு அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டு தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறுமலை அடிவார பகுதியில் உள்ள சோதனைச் மையத்தை கடந்து செல்கிறது.
மேலும் ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற அரசு அணையை காட்டில் பறக்க விட்டு தற்போது வரை மரம் விட்டுப் பகுதியில் ஒரு மரம் கூட வைக்காதால் தொடர்ந்து பசுமையாக இருந்த மலை அனைத்தும் மரங்கள் இல்லாமல் மொட்டையாக காணப்படுகிறது .
தொடர்ந்து இதே போல் வனத்துறை வருவாய்த்துறை ஊராட்சித் துறை அதிகாரிகள் மர கொள்ளையர்களுக்கு ஆதரவாகவும் எந்த ஒரு அரசு ஆணையும் இல்லாமல் வணிகரீதியான மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆதரவாகவும் செயல்படுவதால் தொடர்ந்து மலையில் உள்ள மரங்கள் முழுவதும் அழிக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
வனத்துறை , வருவாய் துறை , ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் தங்களது சுய லாபத்திற்காக ஒரு மலையவே அழித்து வரும் நிகழ்வு தமிழத்தில் வேறு எங்கும் காண முடியாது அந்த அளவிற்கு சிறுமலை கூறுபோட்டு கூவி கூவி அழிக்கப்பட்டு வருவதை பல முறை செய்திகளாக வெளி வந்தும் பல்வேறு அமைப்புகள் , கட்சிகள் , தனி நபர்கள் புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் , சம்பந்தப்பட்ட துறைகள் என அனைவரும் மலையை அழித்துவரும் மாபியா கும்பல்களுக்கு ஆதரவாக இருப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் சிறுமலை மலைபகுதி முழுவதும் கருப்பு பண முதலைகள் கைகளில் தஞ்சமடைந்து இப்பகுதியின் பூர்வகுடிகள் அனைவரும் ஊரை காலி செய்து தங்களது வாழ்வாதரத்திற்காக வேறு பகுதிகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்படும் என்றும் அப்பகுதியில் காலம் காலமாக வசித்துவரும் குடிமக்கள் புலம்பி வருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசும் நேரடியாக தலையிட்டு விசாரண மற்றும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுமலை மலை பகுதியை காப்பாற்ற முடியும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.