
திண்டுக்கல்லில் ஏல சீட்டு நடத்தி ரூ.30.82 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மேற்க்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமாரிடம், திண்டுக்கல் நேருஜி நகரை சேர்ந்த அபுசக்மான் மற்றும் நூர்ஜகான் ஆகியோர், “ சாகர் பைனான்ஸ் “ என்ற பெயரில் மாத ஏல சீட்டு நடத்துவதாக கூறி, மாதம் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என நம்பிக்கை ஏற்படுத்தினர்.இதன் பேரில் வங்கி கணக்குகள் முலம் ரூ.30,82,000 வசூலித்துள்ளனர்.
பின்னர் பணம் கேட்டு சென்றபோது “ உன்னை கொன்று புதைத்து விடுவோம்” என்று கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு டி.ஸ்.பி. குமரேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அபுசக்மான் மற்றும் நூர்ஜகான் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.