
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நுழைவு ஆர்ச் இன்று (25/09/2025) அகற்றப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன்பு செங்கோட்டை கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது இந்த நுழைவு வாயில் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியாக அமைக்கப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிக்குச் சொந்தமான திருவாங்கூர் சமஸ்தான புண்ணிய பூமி என கருதப்பட்டதால், நகரின் நுழைவாயிலில் இரண்டு துவாரபாலகர் சிலைகள் அமைக்கப்பட்டன. மேலும் , அந்நாளில் இந்த எல்லைக்கு அருகிலிருந்த கிணற்றில் குளித்துவிட்டே ஊருக்குள் நுழைய வேண்டும் என்ற நடைமுறையும் இருந்து வந்தது.
காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்ப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இந்த அலங்கார வளைவு குற்றித்து நெடுஞ்சாலை துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் ஆய்வு மேற்கொண்டன. அதன் அடிப்படையில் இன்று இயந்திரம் மூலம் பழமையான இந்த ஆர்ச் இடித்து அகற்ற்ப்பட்டது.
இதே இடத்தில், துவாரபாலகர் சிலையுடன் கூடிய புதிய அலங்கார வளைவு 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.