
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களை களைந்திட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் அரசு ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக எவ்வித திட்டமிடலும் இல்லமால் பல திட்டங்கள் அவசரமாக திணிக்கப்பட்டு வருவதாகவும் , இதனால் வருவாய்துறை அலுவலர்கள் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறைந்தபட்ச கால அவகாசம் கூட வழங்காமல், இரவோடு இரவாக பணிகளை முடிக்க நிர்பந்திப்பது ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட எந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், பழைய ஓய்வூதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படாதது குறித்தும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
வருவாய்துறையினரின் முக்கிய 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தபபட்டன . அவற்றில் சிறப்பு பணி பாதுக்காப்பு சட்டம், அரசு பணியில் மரணமடையும் ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் நியமணம் தொடர்த்தல், வெளிமுகமை, ஒப்பந்த, தற்காலிக நியமனங்களை தவிர்த்தல், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்டப்பட்ட தனி ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும் துத்தூக்குடி மாவட்டத்தில் விஏஒ ஒருவர் வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தும், அரசு ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.