
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறாப்பு மிக்க குற்றாலநாதர் கோயிலில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக கோயில் வளாகத்தில் உட்புறச் சுவர்களில் இருந்து மழை நீர் கசிவு ஏற்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது.
கோயிலின் சுற்றுப்புற சுவர்களில் விரிசல் காணப்படுவதால் தண்ணீர் உள்ளே விழுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பல ஆண்டுகளாக கோவில் சுற்றுப்புறங்களில் எந்த ஒரு திருப்பனியையும் கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும், இரண்டு கல் மண்டபங்கள் சிதலமடைந்து கவலைக்கிடமாக காணப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வரலாற்று சிறப்புமிக்க கோவிலையும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.