
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி பல வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலமாக மாறிவரும் சிறுமலை
இங்கு சிறுமலை மலைப்பகுதியின் முக்கிய வழிபாட்டு தலமான வெள்ளிமலைக்கோவில் மற்றும் அகஸ்த்தியர் ஆசிரமம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த இடத்திற்கு செல்வதற்கு சிறுமலை அடிவார பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனைச்சாவடியை கடந்து மட்டுமே செல்ல முடியும்.
சோதனைச்சாவடியில் வனத்துறையும் சிறுமலை ஊராட்சியும் இணைந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு அந்த தொகையை கொண்டு சிறுமலை மலை பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகின்றனர்.
ஆனால் வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் முக்கிய சுற்றுலா பகுதியான அகஸ்த்தியர்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலீத்தின் கழிவுகள் மற்றும் இதர குப்பைகளும் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வசூலிக்கப்படும் வாகன கட்டணங்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதனையும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்