கோக்கு மாக்கு
Trending

தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி

மலைப்பூண்டு

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியையொட்டி, பூண்டு கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவத் தன்மை கொண்டது.இந்த மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட நாடு முழுவதும் உள்ள பல வகையான பூண்டு, பூண்டின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் கண்காட்சி மற்றும் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

பிரையன்ட் பூங்காவில் மே மாதம் 63-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் பூண்டு கண்காட்சி நடத்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் இணைந்து நடப்பாண்டு மலர் கண்காட்சியையொட்டி, தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button