கோக்கு மாக்கு
Trending

சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்

நாட்டைக் காக்கும் கடற்படையில் பணியாற்றிவிட்டு நாட்டிற்குத் துரோகம் செய்த ஒரு கருப்பு ஆடு சிக்கியுள்ளது

யார் இந்த துரோகி என்றால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார் என்ற லக்கி(24) இவன் கேரளாவின் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையகத்தில் லான்ஸ் நாயக் ஆகப் பணியாற்றி வந்தான்.

கடற்படைத் தளங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாட்டின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் புகைப்படம் எடுத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜென்ட்டுகளுக்கு அனுப்பியுள்ளான்.

உளவு பார்த்ததற்காகப் பாகிஸ்தான் ஏஜென்ட்டுகளிடம் இருந்து பணம் பெற்றது மட்டுமின்றி, தனது வங்கிக் கணக்கிலிருந்து அவனுங்களுக்கு பணப் பரிமாற்றமும் செய்துள்ளான்.

உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ATS இவனை லக்னோவில் வைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button