கோக்கு மாக்கு

காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்

பூட்டிய கடையை திறந்து மதுபாட்டில்களை கடத்தி காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்.

தமிழக சட்டமன்ற தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை குற்றங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அதிலும் குறிப்பாக சட்டவிரோத மது விற்பனையை திண்டுக்கல் நகர் DSP கார்த்திக் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் முக்கிய பகுதியில் அமைந்துள்ள நந்தவனம் சாலை பகுதியில் இயங்கி வரும் 3130 என்ற எண் கொண்ட மதுபான கடையில் இரவு 10 மணிக்கு மேல் கடை மூடப்பட்ட பிறகு அருகில் உள்ள கதவு வழியாக தொடர்ந்து மது விற்பனை செய்துள்ளனர். மேலும் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் ரோந்து மற்றும் ஆய்வு பணியில் ஈடுபட்ட போதும் அசராத கள்ளச் சந்தையில் மது விற்கும் மாபியாக்கள் பூட்டிய கடையை திறந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை எடுத்து பக்கத்தில் உள்ள அறைக்கு கொண்டு செல்லும் வீடியோ அதிர்ச்சி அடைய செய்கிறது.

எனவே இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button