
File Picture
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. சீனிவாசன் அவர்களின் அறிமுகக் கூட்டம் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இதில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டன.
கூட்டத்தின்போது வேட்பாளர் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோதே பல மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். இதனால் இருக்கைகள் பல காலியாகக் காணப்பட்டன.
கூட்டம் முடிந்ததும், வருகை தந்த மக்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட டோக்கன்கள் அடிப்படையில் பணப்பட்டுவாடா நடந்தது இந்தத் தேர்தல் விதிமுறை மீறல்களைத் தேர்தல் பறக்கும் படை கண்டுகொள்ளாமல் இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.