
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் வேடசந்தூர் திமுக வேட்பாளரை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்வதாக மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சரமாரி குற்றச்சாட்டு
இருவர் மீதும் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூண்டோடு ராஜினாமா செய்வதாக பேட்டி
திண்டுக்கல் சிலப்பாடியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை தலைவர் சோமுராஜ் தலைமையில் இன்று 05.04.26 நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர், மாவட்டத் துணைத் தலைவர்கள், வட்டார தலைவர்கள், நகரத் தலைவர்கள் மாவட்ட பொருளாளர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாவட்டத் துணைத் தலைவர் சோமுராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக சாமிநாதன் என்பவர் நீங்களும் செய்யப்பட்டார்.
இவர் கட்சி நிர்வாகிகளை மதிப்பது கிடையாது கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்வது கிடையாது.
கடந்த ஐந்து வருடங்களில் நடைபெற்ற எந்த ஒரு கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டது கிடையாது.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டதால் கட்சி நிர்வாகிகளை மதிப்பது கிடையாது எதற்கெடுத்தாலும் கட்சியை விட்டு நீக்கி விடுவேன் என ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்.
மாவட்ட கட்சி நிர்வாகிகளை நீக்குவதற்கு மாநிலத்தின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும் ஆனால் அது எதுவும் செய்யாமல் தனிச்சையாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என ஜோதி மணி மூலம் சீட் கேட்டிருந்தார் ஆனால் வேடசந்தூர் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் போட்டியிடுகிறார். அவர் கூடவே இருந்து கொண்டு அவருக்கு எதிராக தோற்கடிக்கும் நோக்கத்தில் வேலைகளை செய்து வருகிறார் கட்சி விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து சுவாமிநாதன் செய்து வருகிறார் இதற்கு சப்போட்டாக எம் சி ஜோதி மணியும் செயல்பட்டு வருகிறார்.
மாவட்டத் தலைவர் சுவாமிநாதனின் செயல்பாடுகள் பிடிக்காமல் நீண்ட காலமாக கட்சியில் இருந்து வந்த பல நிர்வாகிகள் தற்பொழுது மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். இதேபோல் பலரும் கட்சி மாற தயாராக உள்ளனர்.
எம்பி ஜோதிமணி தனது ஆதரவாளர்களுக்கு எதிராக கட்சித் தலைமை செயல் பட்டால் சமூக வலைதளங்களில் மற்றும் செய்திகள் மூலமாக கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜோதிமணிக்கு கரூர் தொகுதியில் சீட்டு வழங்கவில்லை என்றால் கட்சியை விட்டு சென்று விடுவார் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வார்.
ஆகவே கட்சி விமர்சனம் செய்யும் ஜோதிமணி மீது ஆல் இந்திய காங்கிரஸ் கமிட்டி உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டும்.
கரூர் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி மீது ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமையிடமும் புகார் தெரிவித்துள்ளோம் அவர்களும் புகார் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார் அவர் மீது ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சுவாமிநாதன் மீது தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பேட்டி: சோமுராஜ் ,
கார்த்திகேயன் மாவட்டத் துணைத் தலைவர்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி
கட்சி நிகழ்ச்சிகளில்
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட நிர்வாகிகளை யாரையும் மதிப்பதில்லை தலைமையையும் பொதுவெளியில் சமூக தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்கிறார் சர்வாதிகாரிபோல் செயல்பட்டு வருகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணியார் நியமனம் செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு காங்கிரஸ் கட்சியை தலைவர் சாமிநாதன்
எதிராக செயல்படுவதாக