
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகை, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பிரதீப் நேரில் சென்று விசாரணையை துரிதப்படுத்தினார்