க்ரைம்

காதலியின் தந்தை அடித்துகொலை..காதல் கைவிட்டுபோனதால் வாலிபரின் வெறிசெயல்

தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் ( வயது 54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் ராஜ் ( 27) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர் .

இந்நிலையில் நாகராஜ் தனது மகளுக்கு சீவநல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்துகொண்டார் . இதனை அறிந்த முருகன் ராஜ் தானும் சுப்புலட்சுமியும் ஒன்றாக இருந்த போட்டோ வை திருமணம் பேசி முடிக்கப்பட்ட வருக்கு அனுப்பி உள்ளார் .

இதனை அறிந்த நாகராஜ் கடந்த மாதம் 30 ஆம் தேதி கண்மணியாபுரம் சென்று முருகன்ராஜை சத்தம் போட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் நாகராஜ் , முருகன்ராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். நாகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முருகன்ராஜ் தென்காசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் . இதில் நாகராஜ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இக்கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button