நெல்லையை அடுத்த கரையிருப்பு பகுதியில் அசோக்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராமசந்திர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் நெல்லை உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் நள்ளிரவில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது துப்பாக்கி மற்றும் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை செய்தியாளர் கல்யாண்