கோக்கு மாக்கு
Trending

சாத்தான்குளம் அருகே 60 அடி கிணற்றுக்குள் 8 பேருடன் சென்ற ஆம்னி கார் விழுந்தது. 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரில் மூழ்கிய 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஆம்னி காரில் 8 பேர் குடும்பத்துடன் வந்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 7 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். இதற்கிடையில் காருக்குள் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டும் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.

தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம்நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர். அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம்கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி தேடி வருகின்றனர்.

கிணற்றுக்குள் குழந்தை உள்பட 5 பேர் சிக்கியுள்ள சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button