ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள சித்தோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு கட்டடங்கள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
பவானி அருகிலுள்ள சித்தோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது தற்போது இந்த பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சுமார் 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்குகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்ட ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி சித்தோடு முன்னாள் பேரூராட்சி தலைவர் வரதராஜன் சித்தோடு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் முன்னாள் தலைமை ஆசிரியரான மறைந்த பொன்மணி என்பவர் பள்ளிக்காக இந்த இடத்தை தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பவானி செய்தியாளர் கண்ணன்