கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள
கவுந்தப்பாடி ஊராட்சி மற்றும்
பெரிய புலியூர்
ஓடத்துறை சலங்கபாளையம் உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த 728 பயனாளிகளுக்கு 12 கோடியே 53 லட்சம் மதிப்பிலான
முதியோர் ஒய்வூதியம்,
விலையில்லா வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகனம் ஆகிய
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
பின்னர் நடந்த
செய்தியளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் கருப்பணன் பேசியதாவது….
காவிரி ஆற்றில் மழை நீருடன் சாய ஆலை கழிவு நீா் கலந்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு 100 சதவிகிதம் தவறு. பொய்யான குற்றச்சாட்டுகளின் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முறைகேடாக செயல்படும் காகித ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டொ்லைட் ஆலை குறித்த நீதிமன்ற தீர்ப்பில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாாியத்தின் மீது எவ்வித குற்றச்சாட்டும் தொிவிக்கவில்லை… குற்றச்சாட்டு கூறியிருப்பதாக வரும் தகவல்கள் தவறானது.
என அமைச்சா் கருப்பணன் தொிவித்துள்ளாா்.