தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டது அந்த மனுவில், தற்போதைய கொரானா பாதிப்பு காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடினமான சூழலில் வாழ்க்கை நடத்தி வரும் ஏழை எளிய மக்களுக்கு பாரத பிரதமரின் உயிர்காக்கும் சிகிச்சை திட்டம் மற்றும் முதல்வர் காப்பீட்டு திட்டம் ஆகிய இரு காப்பீடு திட்டங்கள் இருந்தும் கூட தனியார் மருத்துவமனைகளில் அதை செயல்படுத்தாமல் ஏழை, எளிய மக்களிடம் பணம் வசூலிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் பாரத பிரதமரின் சுத்தமான சுகாதாரமான குடிநீர் இணைப்பு திட்டம் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் ஆய்விற்காக தமிழகத்திற்கு 640 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஊராட்சி பகுதிகளில் முறையற்ற இணைப்புகளை கண்டறிந்து அதற்கு ரூபாய் 3000 கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஜல்சக்தி இணைப்பு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதையும் ஜல் சக்தி இணைப்புக்கு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?அல்லது இலவச திட்டமா? என்பதை மக்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாக அறிவிக்க வேண்டும் மேலும் ஜல்சக்தி பெயரில் முறையற்ற வசூலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் மனு வழங்கினார்.
செய்தியாளர்
ரியாஸ் கான்