
புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடமும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் நகராட்சி நிர்வாகத்தினர் வசூலித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கபட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு செய்து அனைத்து வர்த்தக நிறுவனங்களும் செயல்படலாம் போக்குவரத்து விடலாம் என அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக
ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் தங்களது இரு சக்கர வாகனத்தில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அறந்தாங்கி பேருந்து நிலைய சுற்றுப்பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
அவர்களை நகராட்சி நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் குழுவாக நின்று கண்காணித்து முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் ரூபாய் 100 வீதம் வசூல் செய்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி பணியாளர்கள் ஒருவரிடம் கேட்கையில்….
ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்து செல்கின்றனர்.
தற்போது புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் முக கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் இவர்களை அழைத்து அவர்களிடம் முககவசம் வழங்கி மேலும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தவறாது முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அறிவுரை கூறி வருகின்றோம் என கூறினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி