தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மத்தியபாக காவல் நிலையம் சார்பில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திருநங்கைகள் மற்றும் பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தலா 5 கிலோ அரிசி 100 பேருக்கு வழங்கினார்.
இதைதொடர்ந்து கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. ஜெயக்குமார், மாவட்டம் முழுவதும் உள்ள கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் என்றும் கூறினார். கொரோனா சமூக தொற்றாக மாறிவிடாமல் இருக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி செய்தியாளர் அலெக்ஸ் பாண்டியன்