
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (நவ.,22) உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார். மாரியப்பா நகர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.