அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மண்மங்கலம்இ பண்டுதகாரன்புதூர் கரூர் கூகிள் மீட் செயலி வழியாக 12.09.2020 அன்று கணினிஅறிவியல் துறை சார்பாக சைபர்நாட் அசோசியேசன் துவக்க விழா நடைபெற்றது. அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி. N.கோதை நடேசன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் P. நடேசன் தலைமையுரையாற்றினார். செயலாளர் திரு N. கண்ணன் வழி நடத்தினார். அறிவியல் புலத்தலைவர் முனைவர் ஜெ . திலகவதி வாழ்த்துரை வழங்கினார். இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஜி.ஜீவிதா செயலாளார் வரவேற்புரையாற்றினார். இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி எஸ் .ஹரிணி தலைவர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் ஜெ .சந்திரா இணைபேராசிரியர் கணினிஅறிவியல் துறை கிரிஸ்ட் பல்கலைக்கழகம் பெங்களூர் சைபர்நாட் அசோசியேசனை துவக்கி வைத்து மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் அதன் தேவை பற்றி விளக்கி கூறினார் .
தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய மாணவிகளின் சந்தேகங்களை விளக்கினார். இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி கே .ஐனனி துணைத்தலைவர் நன்றியுரையாற்றினார். இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி கே .சங்கரிஸ்ரீ இணைச்செயலாளார் துவக்க விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் எஸ் .சீதா மற்றும் உதவி பேராசிரியர் கே .சிந்து விழா நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். இதில் கல்லூரியின் ஆங்கிலத்துறைத்தலைவர் எ. ஆர் .பாரதி மற்றும் கணிதத்துறைத்தலைவர் டி .வள்ளியாத்தாள் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எஸ் .யோகப்பிரியா உட்பட அனைத்து பேராசிரியர்களும் மற்றும் மாணவிகளும் பங்கேற்று கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.