கரூர் 12-09-2020
கரூர் மாவட்டத்தில் மூன்று மையங்களில் நீட் தேர்வு
2,103 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 452 நபர்களும், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 88 நபர்கள் என மொத்தம் 540 நபர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
மேலும் அருகில் உள்ள பிற மாவட்டத்தை சேர்ந்த 1563 மாணவர்கள் கரூர் தேர்வு மையங்களில் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
கரூர் கொங்கு கல்லூரியில் 363 மாணவர்களும், வி.எஸ்.பி. இன்ஜினியரிங் கல்லூரி 780 மாணவர்களும், வேலம்மாள் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 960 மாணவர்கள் என மூன்று தேர்வு மையங்களில் 2,103 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன .
செய்தியாளர்
எஸ்.கண்ணன்