ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அரிமா சங்கம் சார்பில், சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்முறை கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரிமா சங்கத் தலைவர் பாசம் மூர்த்தி, செயலாளர் அரிமா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மறைந்த ஈரோடு மாவட்ட குழு துணை தலைவர் வேலுச்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் பவானி பழனியம்மாள், மறைந்த கொரோனா முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.