தேசிய அளவிலான சிறந்த ஊராட்சிக்கு விருதினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு த.அன்பழகன் அவர்களிடம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி சேகர் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
ஊராட்சியில் பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தல், வருவாய் இனங்களை பெருக்கும் வகையில் செயல்படுதல், ஊராட்சி கணக்கு அதை சிறப்பாக பராமரித்தல், முறையாக கிராமசபை கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு சிறந்த ஊராட்சிக்கு தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சஷக்திகரன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதினை சனிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு கே. பழனிசாமி அவர்களிடமிருந்து 15 லட்சம் திறன் கூடிய தேசிய விருதினை கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி சேகர் பெற்று கொண்டார்.
பின்னர் அந்த விருதினை இன்று கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு த.அன்பழகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ராஜேந்திரன், கூடுதல் திட்ட இயக்குனர் திருமதி கவிதா ஆகியோரிடம் தேசிய விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் இந்நிகழ்வின் போது ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
எஸ். கண்ணன் கரூர் செய்தியாளர்