கோக்கு மாக்கு

உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி.பி

மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல் அது என்று அது பிரபலம் அடைந்திருந்தது. அப்போது, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT ) சார்ந்த (மர்ஹூம்)கவிஞர் மூஸா காக்கா அவர்கள் Qari Abdur Rahman All Sudais சுதைஸ் அவர்களின் கிராஅத் (ஒரே மூச்சில் அவர் ஓதும் திருக்குர்ஆன்) வசனங்கள் அடங்கிய கேசட் ஒன்றையும் ஐ.எப்.டி. திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றையும் எடுத்துக் கொண்டு மெளலவி. ஜஃபருல்லாஹ் ரஹ்மானியையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று SPB ஐ சந்தித்து கொடுத்தார். அதைக் கேட்டபின்பு இதுதான் ஒரிஜினல் ; நான் ஒரே மூச்சில் எல்லாம் பாடவில்லை. ரெக்கார்டிங்கில் அப்படிப் பதிவு செய்யப்பட்டது என்று மனம் திறந்து பாராட்டினார். *தகவல்* : சகோ. ‘ஃபிதாவுல்லாஹ்” ஆசிரியர் – *நம்பிக்கை* இதழ் – மலேசியா. (பி.கு: நீதிபதியாக ஃபத்வா வழங்குவதை விட இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்லும் “தாஃயியாக ” திகழ்வது மிகவும் முக்கியமானது. நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையும் கூட.) தகவல் : டாக்டர் காதர் மொய்தீன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button