குளித்தலை சார் ஆட்சியரின் ஒருதலை பட்ச நடவடிக்கையால் சமூக நலத் திட்ட வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளரும் கட்டாய பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று 11:30 மணிக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர் .
போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் ஆர்.மங்கள பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது .
கட்டாய பணிமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு மணி நேரமாக நீடிக்கும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்.
—
S.கண்ணன் M.A.B.Ed.,
கரூர் மாவட்ட செய்தியாளர் ,