கல்லிடைகுறிச்சி அருகே பொட்டல் கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி உலுப்படிபாறை, மலையான்குளம் மூலச்சி,பாடாகபுரம், அழகப்பபுரம்,ரெட்டியார்புரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு கரம்பையிலிருந்து பொட்டல் வரை மூன்று கிலோமீட்டருக்கு தார்சாலை உள்ளது. இந்த சாலை தற்போது நல்ல நிலையில் உள்ளது ஆனால் இரண்டு நாட்களாக புதிய சாலை அமைப்பதற்காக பழைய ரோட்டை ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெயர்த்தெடுக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் புதிய சாலை போடுவதற்காக பழைய ரோட்டை உடைத்தெடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
சமூக ஆர்வலர்களின் கேள்வி
1.நல்லா இருக்கும் ரோட்டை பெயர்த்து புதியரோடு போட காரணம் என்ன?
- மக்களின் வரி பணத்தை வீணாக்குவது ஏன்?
- சாலை ஓரத்தில் புதிய மண் போடுவதற்கு பதில் ரோட்டு ஓரத்திலேயே ஜே.சி.பி. மூலம் மண்ணை அள்ளி போடுவது ஏன்?
- ரோடு எந்தவித சேதரமும் ஏற்படவில்லை ஆனால் அந்த ரோட்டை உடைத்து போட காரணம் என்ன?
விசில் செய்தியாளர் திருமுருகன் கழுநீர்குளம்