தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் ஆகியவற்றுக்கு வரும் 17ம்தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.மேலும் வாக்கு எண்ணிக்கையான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தேதிகளில் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடுவதற்கு தகுந்த வழிமுறைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
