*ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான கூட்டணி கட்சிகளை வீழ்த்துவோம்!*
*தூத்துக்குடி மக்கள் உறுதியேற்பு.!*
தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் எனும் ஒற்றை கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசு மற்றும் மாநிலத்தின் சர்வாதிகார அதிமுக அரசும் ஒன்றிணைந்து தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்து, நச்சுக்காற்றின் கோரப்பிடியில் இருந்து தன்னுயிர் காக்க போராடிய அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் துயர நிகழ்வுகளை மறக்க முடியாத ஒன்றாகவே இன்று வரை தொடர்ந்து வருகிறது.
துப்பாக்கி சுடு,கொடூர தாக்குதல்,உயிர் இழப்புகள்,பொய் வழக்குகள், அரசின் விசாரணை அலைகழிப்பு,காவல் துறையினரின் அடக்குமுறை என அரசின் அச்சுறுத்தல்களால் இன்று வரை ஸ்டெர்லைட் எனும் பெயரால் தூத்துக்குடி மக்கள் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையே உள்ளது. பாரபட்ச ஆணைய விசாரணை, நேயமற்ற சிபிஐ விசாரணை, திணிக்கணிக்கப்பட்ட பொய் வழக்குகள்,வாபஸ் பெறப்படாத வழக்குகள் என அரசின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் கொதிப்படைந்தே உள்ளனர். இந்நிலையில் திறக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே அதிமுக பிரமுகரின் தலைமையில் பராமரிப்பு பணிகள் என வேதாந்தா ஸ்டெர்லைட் மீதான அதிமுகவின் விசுவாசம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
பாரம்பரிய கலாச்சார பண்பாடு தொடர்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வழக்குகளை ரத்து செய்த அதிமுக அரசால், மக்களின் உயிரியல் வாழ்வாதர பிரச்சினை
யான நச்சாலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற மறுத்துவிட்ட இன்றைய அதிமுக பாஜக அரசின் செயல்களை வன்மையாக கண்டிக்கதக்க ஒன்றாகும். இந்நிலையில் ஆடை பழையது ஆள் புதியது என்கிற நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தலை எதிர்க்கொள்கிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசாணை இட்ட எடப்பாடி அரசால் நிரந்தரமாக இனி ஆலை இயங்காது என ஆலையை அப்புறப்படுத்த இயலவில்லை. மூன்று மாதங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைய தீர்வு இருக்கும் என்ற சட்டமன்றத்தில் குரலெழுப்பிய அதே எடப்பாடி அரசால் இன்று பல ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. வழக்கு விசாரணை வாபஸ் இல்லை, உயிரிழப்புகளுக்கான நீதியில்லை, உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்லை என இன்றைய எடப்பாடி அரசின் கோரத் தாண்டவம் வெளிப்படையாக வெளிப்பட்ட வண்ணம் உள்ளது. தற்போது தேர்தல் சூழல்களை கொண்டு தூத்துக்குடி மக்களிடம் தங்களது வேட்பாளர்களை களமாட விடாமல் கூட்டணி கட்சியினரை கொண்டு சோதனை செய்து பார்க்கிறது அதிமுக.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களால் புறந்தள்ளப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பாஜக -அதிமுக கூட்டணி வேட்பாளரின் அதே சூழல், அதே கள அடிப்படையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களால் நான் மக்களுக்காக நான் என கூறிய ஜெயலலிதா தயவிலான எடப்பாடி ஆட்சியில் தற்போது வேதாந்தா ஸ்டெர்லைட்டால் “கார்ப்பரேட்டால் நான் கார்ப்பரேட்டுக்காக நான் என பிரகடனப்படுத்தி வரும் அதிமுக பாஜக கூட்டணியால் தற்போதைய சூழலில் தூத்துக்குடி தொகுதியில் வெல்ல முடியாது என்பதே உண்மை.
எழுத்துப் பதிவு…
*#அக்ரி பரமசிவன்.*