ஷியோமி நிறுவனம் ஹைப்பர் சார்ஜ் என்ற புதிய தொழிநுட்பத்திற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு நேற்று ஷியோமின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் ஷியோமி வெளியிட்டு இருக்கிறது.
Charge up to 100% in just 8 minutes using wired charging and 15 minutes wirelessly! #XiaomiHyperCharge
Too good to be true? Check out the timer yourself! #InnovationForEveryone pic.twitter.com/muBTPkRchl
— Xiaomi (@Xiaomi) May 31, 2021
ஷியோமி தற்பொழுது அறிமுகம் செய்துள்ள ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பம் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டது. இது 4000 mAh பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 mAh பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இதற்கு முன்னதாக ஷியோமி அறிமுகம் செய்த MI 10 Ultra மாடலில் 80 வாட் வயர் லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. புதிய அறிவிப்பின் மூலமாக 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக ஷியோமி சாதனை படைத்துள்ளது. ஷியோமி நிறுவனம் வெளியுள்ள வீடியோவில் 4000 mAh பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் செய்ய 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடுகிறது.