
இவைகளுக்கெல்லாம் ரெட் அலர்ட் !!! கவனம்!!
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை (நவ. 26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் மழைநீர் புகுந்தது. இதனால், பிரகாரம் மூழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. தூத்துக்குடியில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காலையில் இருந்து திருவாரூரில் மழை பெய்து வரும் நிலையில்
முன்னெச்சரிக்கை காரணமாக நாளை(26-11-2021) திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுகோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தது அம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.