கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உடல் நலன், ஆரோக்கியம் அவசியம் என்பதை உணர்ந்து தினம்தோறும் வாட்ஸ்அப் குழு மூலம் பள்ளி குழந்தைகளை ஒருங்கிணைத்து யோகா பயிற்சியினை பள்ளி தலைமை ஆசிரியை த.கண்மணி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து பள்ளி குழந்தைகளை ஊக்குவிப்பு செய்து வந்தார்.
தினந்தோறும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வழங்கப்படும் இப்பயிற்சியால் குழந்தைகளுக்கு மனநல ஆரோக்கியம் வளரும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வந்தது .
இன்று 7வது உலக யோகா தினத்தை முன்னிட்டு , தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டாங்கோவில் புதூரில் சிறப்பு யோகா பயிற்சி நிகழ்வினை யோகா பயிற்றுனர் நிருதீஸ்வேல் பள்ளி குழந்தைகளுக்கு யோகப் பயிற்சி அளித்தார்.