தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி சுப்புத்தாய் இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர் இந்நிலையில் சம்பவத்த அன்று வேலுச்சாமி ஆடு மேய்க்கவும் அவரது மனைவியும் 100 நாள் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோல் சாவியை எடுத்து அதிலிருந்த 2 லட்ச ரூபாய் பணம் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் வீட்டிற்கு வந்த அவரது மனைவி கதவு உடைந்து கிடந்த பார்த்த போது அதிர்ச்சி அடைந்த பிரோலை திறந்து பார்த்த போது பணம் நகை கொள்ளை அடிக்கபட்டது தெரியவந்தது உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு வந்த சின்ன கோவிலங்குளம் காவல்துறையினர் கொள்ளை போன நகை மற்றும் பணம் மதிப்பு குறித்தும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
செய்திகள் : குமரன், சங்கரன்கோவில்