கேரளாவில் 10 பேருக்கு கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி..!
கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதித்த கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளின் தலை இயல்பான குழந்தையின் அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணியான அவர் புதன்கிழமை மருத்துவமனையில் கருத்தரித்தார். முன்னதாக கடந்த ஒருவாரத்திற்கு முன் அவரது தாயாரும் இதே அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 13 பேரின் பரிசோதனை மாதிரிகளை புணேவில் உள்ள தேசிய நுண்ணுயிரிகள் ஆய்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.