தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கடையாலுருட்டி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் ஆட்டோ ஓட்டூனர் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருவதாகவும் கடந்த ஆண்டை விட தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்ந்து கொண்டே இருப்பதால் தொழில் மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளது.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவரின் நண்பரின் உதவியோடு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக பேருந்து பயணத்தில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம் என அரசு அறிவித்ததை தொடர்ந்து ஆட்டோ தொழில் நலிவடைந்து உள்ள நிலையில் டீசல் பெட்ரோல் விலை உயர்வு என இரண்டும் சேர்ந்துள்ளதால் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளதாக வேதனையுடன் பேசி வீடியோ வெளியீட்டுள்ளார்
தற்போது அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.