தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனவே 12ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது.
அந்த வகையில் ஊரடங்கை ஜூலை 19ஆம் தேதி நீட்டித்து புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணியிலிருந்து 9 மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள், நடைபாதை கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான கூடங்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது