லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடந்துள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் விக்ரம் திரைப்படம் அரசியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. அதோடு, இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே அட்டவணையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல் ஹாசன் தேர்தல் பணிகளை முடித்ததும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதியளித்தது. இதனால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
விக்ரம் படத்துக்கான டெஸ்ட் ஷூட் முடிவடைந்துள்ள நிலையில், இன்று படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் #VikramFirstLook என்ற ஹேஸ்டேகில் கொண்டாடி வருகின்றனர்