குடும்பப் பிரச்சினை காரணமாக தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள செக்கடியூர் நடு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் .இவருக்கும் தென்காசியை சேர்ந்த கௌரி கனகா வயது 30, என்பவருக்கும் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன . இவர்களுக்கு கீர்த்தன் ஐந்து வயதில் மகனும், 3 வயதில் இலக்கியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் இன்று வீட்டில் ஆள் இல்லாத போது தாய் கௌரி கனகா தனது இரண்டு பிள்ளைகள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் . தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : ஆர்.எஸ்.சரண் , கடையம்