தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கூட்டுறவு சங்க நியாய விலைக் கடையில் தொடர்ந்து நடைபெரும் அவலம்.
பொட்டல்புதூர் மேல பஸ் ஸ்டாண்ட் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் அருகே உள்ள
மார்க்கெட் ரேஷன் கடையில் அந்த பகுதி மக்களுக்கு கடந்த சில வருடங்களாக பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்பட்டு வருகிறது .
5 வருடகால பழைய ஸ்டாக் அரிசி போல இது காணப்படுவதோடு மட்டுமில்லாமல் புழுக்கள் மற்றும் சிறு வண்டுப் பூச்சிகள் நிறைய உள்ளது . இந்த மார்க்கெட் ரேஷன் கடையில் வறுமை கோட்டுக்கு கீழ் அதிகமான குடும்பங்கள் உள்ளனர் .
தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசிதான் அவர்களின் அன்றாட உணவாகும் . இதுபோன்ற சூழ்நிலையில் இது போன்ற தரமற்ற அரிசி வழங்கப்பட்டால் ஏழை மக்களால் நிம்மதியாக சாப்பிட முடியுமா ?
மேலும் இங்கு கொடுக்கப்படும் சீனி 1500 கிராமுக்கு 1334 கிராமும் ,
துவரம் பருப்பு 1 கிலோ எடைக்கு 910 கிராமும் மற்றும் இது போன்று அரிசி மற்றும் நிறுவை செய்து கொடுக்கும் அனைத்து பொருட்களும் எடை குறைவாகவே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .
இதன் மூலமாக எஞ்சியிருக்கக்கூடிய பொருட்களை அவர்களுக்கு தெரிந்த வெளிக் கடைகாரர்களிடம் நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர்.
இதை தைரியமாக செயல்படுத்துவது *வெங்கட்* என்ற நியாய விலைக் கடை ஊழியர்.
இதைப் பற்றி கேட்கும் நபர்களை அதிகாரத் தொனியில் ஒருமையில் பேசி மிரட்டுவதோடு சரிவர பொருட்கள் வழங்காமல் அலைக்கழிக்கிறார்.
இந்த நிலை இங்கு மட்டுமில்லை.
பெரும்பாலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இது போன்ற அவலங்கள்தான் தற்போதுவரை நடந்து வருகிறது .
இதை கண்காணிக்க வேண்டிய உணவுத் துறை அதிகாரிகளோ வேண்டுமென்றே கண்டும் காணாமலும் கப்சிப் என இருக்கிறார்கள்.
அந்தந்த மாவட்ட – DS0-தாலூகா TSO விற்கு ரேஷன் கடைகளில் இருந்து தவறாது மாமுல் பணம் செல்வதால் அவர்களும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. தற்போது விடியல் பிறக்கும் என நம்பி ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வாக்கு செலுத்திய மக்களுக்கு ஆட்சி மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறவில்லை.
செய்தியாளர் : ஆர்.எஸ்.சரண், கடையம்