இந்த ஆண்டு கொரோனா பெருற்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சில தினங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக குற்றாலம் உள்ளது. இங்கு இந்த ஆண்டு தளர்வுக்கு பின்பு குற்றால சீசன் தொடங்கியுள்ளது அதன் காரணமாக தமிழகம் முழுதும் இருந்து சுற்றுலா வாசிகள் குற்றாலம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பதற்கான தடை இன்னும் தளர்க்க படாததால் சுற்றுலா வாசிகள் அனைவரும் தனியார் அருவிகளுக்கு சென்று குற்றால சீசனை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் தான் நேற்று தென்காசி மாவட்டம் ஆட்சியர் உத்திரவின் பேரில் தனியார் அருவிகளும் மூடப்பட்டது. இதனால் வெளி ஊர்களில் இருந்து வரும் சுற்றுவா வாசிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அருவிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் குழாய்களில் இருந்து வரும் நீரில் குளித்து வருகின்றனர்.