
சாம்பவர் வடகரை அருகே பொய்கை ரோட்டில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சாம்பார் வடகரை பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவன் பொன்ராம் இறந்து கிடப்பதாக கிடைத்த

தகவலையடுத்து சுரண்டை தீயணைப்பு மீட்புப்படையினர் கிணற்றில் இறங்கி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாம்பவர் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.