அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் எழில் ரோஜா மற்றும் வல்லரசு. இவர்கள் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எழில்ரோஜா நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறினார் இதையடுத்து காணாமல் போன தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய எழில் ரோஜா அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார் அப்போது இளம்பெண்ணிடம் விசாரணை செய்த போலீசார் இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர் மகளை பார்ப்பதற்காக வந்த பெற்றோர் காவல் நிலையத்தில் மகள் இல்லை என போலீசார் கூறியதால் ஆத்திரமடைந்தவர்கள் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது காவலர்கள் அவரை காப்பாற்றி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளதாகவும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் அப்போது நீதிமன்றத்தின் மூலம் நீங்கள் உங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள் என கூறியதையடுத்து சமாதானம் அடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது