தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 439வது திருவிழா கொடியேற்றம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் மக்கள் பங்களிப்பின்றி நடைபெற்றது.
இந்தப் பனிமய மாதா பேராயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை கொரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாடுகள் நடை பெற உள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.