அரியலூர் – காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் மாவட்டம் திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் நீராதாரத்தை பாதிக்கும் வகையில் காவேரியின் குறுக்கே மேகதாது இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது இந்த அணை கட்டப்பட்டால் காவேரி ஆற்றின் நீரின் பெருமளவு தமிழகத்திற்கு கிடைக்காத சூழ்நிலை உருவாகும் இதனால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட மக்களின் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் மேலும் டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாகும் சூழ்நிலையும் ஏற்படும் எனவே தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை கட்ட மத்திய அரசு கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்